ரயிலில் இருந்து நடத்தப்பட்ட 'அக்னி ப்ரைம்' ஏவுகணை சோதனை வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இந்த நடுத்தர ரக ஏவுகணை பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டது. அடுத்த தலைமுறையை சேர்ந்த இந்த ஏவுகணையில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த தனித்தன்மை வாய்ந்த திறனை இந்தியாவும் பெற்றுள்ளது. இந்த பரிசோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்துக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

varient
Night
Day