யமுனையில் பாயும் வெள்ளம் - அபாய கட்டத்தில் அதிசய சின்னம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு சார்பில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் பருவ மழை முடிவுக்கு வந்தாலும் இமயமலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யமுனை ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றையொட்டிய பகுதிகளில் வெள்ளம் நீர் புகுந்துள்ளது. 

அதன்படி, யமுனை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள ஆற்றுப் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தாஜ்மஹாலின் சுற்றுச் சுவர் வரை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தாஜ்மஹாலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மதுராவிலும் யமுனை நதியை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் மாடிகளிலும் கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். வெளியே செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு மதுரா மாநகராட்சி ஊழியர்கள்  படகுகளில் சென்று உணவு வழங்கி வருகின்றனர்.

பஞ்சாபில் பெய்து  வரும் கனமழை  மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பருவமழையால் பஞ்பாப் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாகவும் மழை தொடர்பான அசம்பாவிதங்களாலும் ஞாயிற்றுக் கிழமை வரை 46 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மேலும் ஐந்து பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருபதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெள்ளம் காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day