மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம், வதோதரா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கனமழை காரணமாக, அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்நேரத்தில் பாலம் வழியாக சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்து மூழ்கின. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடர்த்தியான சேறும், மழையும் இருப்பதால், மீட்புப்பணியை கடினமாக்குவதாகவும், இன்னும் சில வாகனங்கள் ஆற்றில் மூழ்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day