மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தணிந்த நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்கள், 25 வான் பாதைகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மற்றும் 25 வான் பாதைகளையும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சண்டிகர், ஸ்ரீநகர், அமித்சர், லூதியானா, பாட்டியாலா, சிம்லா உள்ளிட்ட எல்லையோர விமான நிலையங்களின் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது.

Night
Day