மாணவர்களிடம் உரையாட ராகுலுக்கு அனுமதி மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 பீகார் மாநிலம் தர்பங்காவில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. முதலில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ராகுல் காந்தி வந்தால், அவர் இளைஞர்களை ஊக்குவித்து ஒன்றிணைப்பார் என பாஜக பயப்படுவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


varient
Night
Day