மத்தியப்பிரதேசம் : பள்ளிகளில் வாரம் ஒரு முறை "புத்தகப்பை இல்லா தினம்" கடைபிடிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசத்தில் வாரம் ஒரு முறை பள்ளிகளில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவேண்டி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை புத்தகப்பை இல்லா தினம் கொண்டாட அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதய் பிரதாப் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் இசை ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், இத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Night
Day