இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கான தலா 22 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் வெளியிட்டுள்ளன. மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட அந்த மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாயுதி கூட்டணி அமைத்துள்ளன. இந்த தேர்தலுக்கான 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக் கிழமை பாஜக வெளியிட்டது. இந்நிலையில், அகோட், அகோலா மேற்கு, கட்சிரோலி, வரோரா உள்ளிட்ட 22 தொகுதிகள் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 22 பேர் கொண்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...