பெண்கள் சக்தி குறித்துப் பேசும் மத்திய அரசு, அதனை செயலில் காட்ட வேண்டும் : உச்சநீதிமன்றம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலோர காவல்படையில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்க மறுக்கும் ஆணாதிக்க அணுகுமுறை மத்திய அரசிற்கு இழுக்கு ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.   இந்திய கடலோர காவல்படையில் பணிபுரியும் பெண்  அதிகாரிக்கு நிரந்தர கமிஷனில் இடமளிக்க   மத்திய அரசு மறுத்தது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ராணுவம் மற்றும் கடற்படையில் பெண்கள் இருக்கும் போது கடலோர காவல்படையில் மட்டும் ஏன் பாரபட்சம் என கேள்வி எழுப்பியது. பெண்களால் எல்லைகளைக் காக்க முடியும் என்றால் கடலோரங்களையும் பாதுகாக்க முடியும் என்று கூறிய அமர்வு, பெண்கள் சக்தி எனத் தொடர்ந்து பேசி வரும் மத்திய அரசு அதை செயலில் காட்ட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டது.

Night
Day