அதி கனரக செயற்கை கோளை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் மிஷன் வெற்றி - இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தீ வைத்த நபரின் மனைவியும், மாமியாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஓடை தெருவைச் சோ்ந்தவர் அக்பா் அலி. கார் ஓட்டுநரான இவா், கணவரை இழந்த செய்யது அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பாத்திமாவின் முதல் கணவருக்கு பிறந்த மகன், மகள் மற்றும் மாமியாருடன் அக்பர் அலி ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பாத்திமாவை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில், 2 நாட்களுக்கு முன்னர்தான் அக்பர் அலி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அக்பர் அலி வீட்டில் உறங்கி கொண்டிருந்த மனைவி, மாமியாா் மற்றும் 2 பிள்ளைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதில், அக்பா் அலிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 5 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாத்திமாவும், அவரது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அக்பர் அலி உட்பட 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாத்திமாவின் முதல் கணவர் விபத்தில் இறந்ததால் கிடைத்த 11 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை கேட்டு, அக்பர் அலி தகராறு செய்ததாகவும், பணத்தை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர் இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.

Night
Day