பெங்களூரு துயரம் - கண்ணீர் சிந்திய டி.கே சிவக்குமார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய உயிரிழப்புகளை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என்றும் மனதை மிகவும் காயப்படுத்தி இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இது நடந்திருக்கக்கூடாது என்றும் இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், உண்மைகளை அறிந்து கொண்டு தெளிவான தகவலை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார். பாஜக இந்த துயரத்தை அரசியலாக்குவதாகவும் சிவகுமார் குற்றம் சாட்டினார்.

Night
Day