புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுக்கூடும் என்பதால் வரும் 16, 17 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 16, 17ம் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வரும் 16, 17ம் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

varient
Night
Day