புதுச்சேரி யில் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் குழு தேர்தலை ரத்து செய்த நகராட்சியை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது. 


சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம், வியாபாரத்தை ஒழுங்குபடுத்த ஏதுவாக சாலையோர வியாபாரிகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடத்துவதாக புதுச்சேரி நகராட்சி அறிவித்திருந்தது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்த வலியுறுத்தியும் சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றதால், போலீசாருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day