கார் மோதி தாய், மகன் உயிரிழந்த சோகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நல்லகானக்கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்வேதா பாணு. இவரது மகன் சமீர். தாய், மகன் இருவரும் தினமும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரமாக நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஓசூர் நோக்கி கேரளாவை சேர்ந்த ஸ்பேனீஸ் நாயர் என்பவர் ஓட்டி சென்ற கார் மோதியதில் தாய் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Night
Day