பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்படும் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பதாகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவு காரணமாக வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டினர்.

Night
Day