போராட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக நுட்பனர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தேனாம்பேட்டையில் போராட வந்த ஆய்வக பணியாளர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் சுமார் 800க்கும் அதிகமான கிரேட் 2 ஆய்வக நுட்பனர் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், வெயிட்டேஜ் முறையை மாற்ற நடவடிக்கை எடுக்காத விளம்பர திமுக அரசை கண்டித்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை, டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் போராட வந்தவர்களை ஆங்காங்கே நிறுத்தி போலீசார் கைது செய்தனர். போராட்டக் களத்திற்கு வருவதற்கு முன்பாகவே ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்வதாக ஆய்வக பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

Night
Day