பி.எஸ்.எப் வீரர் பூர்னப் குமார் ஷா-வை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாக். ராணுவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டியதாகக் கூறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்னப் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 


பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் எல்லை அருகே பாதுகாப்பு பணியில் இருந்தபோது, கடந்த மாதம் 23ம் தேதி ​​சர்வதேச எல்லையைக் கடந்ததாக, பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் அவர் கைது செய்யப்பட்டார். எல்லைக்கு அருகில் வேலை செய்யும் விவசாயிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 'கிசான் காவலர்' பிரிவில் அவர் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், 20 நாட்களுக்குப் பின்னர் பூர்னப் குமார் ஷா,  இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அடாரி - வாகா எல்லை வழியாக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

varient
Night
Day