குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள், ஆபரேசன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தனர்.


டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவை, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, விமானப் படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆபரேசன் சிந்தூர் குறித்து குடியரசுத் தலைவரிடம் அவர்கள் விளக்கமளித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடியை மகத்தான வெற்றியாக மாற்றிய ஆயுதப் படைகளின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டினார். 

Night
Day