பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்‍கை தொடர்பாக டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்​திர​ மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்‍களை குறி வைத்து பீரங்கி குண்டுகளை வீசியும் ட்​ரோன்களை அனுப்பியும் தாக்‍கி வருகிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த ட்ரோனை இந்தியா அழித்தது. பாகிஸ்தானுக்‍கு இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இரவு பகலாக தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில்  உயர்மட்ட அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்‍கை தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி அமர்பிரித்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day