சென்னையில் தங்கம் சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில்  ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து சவரன் 71 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 40ரூபாய்க்கும், கிராம் 165 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராம் 1 ரூபாய் குறைந்து 109 ரூபாய்க்கும், கிலோ ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day