பிரதமரின் தனி செயலாளராக நிதி திவாரி நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

நிதி திவாரியின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னதாக வெளியுறவுத்துறையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். 2014 பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான நிதி திவாரி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day