பார்க்கிங் பிரச்னையில் காலா திரைப்பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 டெல்லியில் வாகன நிறுத்தம் பிரச்னையில் காலா திரைப்பட நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நிஜாமுதின் பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்க கூறிய ஆசிப் குரேஷிக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், பயங்கர ஆயுதங்களை கொண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Night
Day