இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவத்தால் 13 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பஹல்காமின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இரு இடங்களிலும் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் போர் பதற்ற சூழல் நிலவியது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தின. இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து மேற்கொண்டு பாதிப்புகளை தடுக்க அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுதவிர, அருகிலுள்ள கிராம மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.