அமைச்சர் துரைமுருகனின் இலாகா பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசின் அமைச்சரவையில் தற்போது திடீரென இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனுக்கும், துரைமுருகன் வகித்து வந்த கனிம வளத்துறை ரகுபதியிடமும் மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நீதிமன்றங்களின் கண்டிப்புக்கு ஆளான செந்தில் பாலாஜியும், பொன்முடியும் அமைச்சர் பதவி பறிப்புக்கு ஆளானதை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி உச்சநீதிமன்றத்தால் ஜாமீனா? பதவியா? என்ற கண்டிப்புக்கு ஆளானார் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவரிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை இலாகா, போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கூடுதலாக பொறுப்பாக வழங்கப்பட்டது. இதேபோல பொன்முடி நிர்வகித்து வந்த வனத்துறை அமைச்சர் பதவி, பால் வளத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் வகித்து வந்த பால் வளத்துறை முன்பு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட மனோ தங்கராஜுக்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் துரைமுருகனின் இலாகா பறிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் வகித்து வந்த கனிம வளத்துறை ரகுபதியிடமும், ரகுபதி நிர்வகித்து வந்த சட்டத்துறை துரைமுருகனிடம் திடீரென மாற்றி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குவாரிகளில், வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் ரெய்டானது நடத்தப்பட்டது. இப்படியான சூழலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Night
Day