பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கை - அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கையாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பய்ஙகரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு, தற்போது போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விளக்க  அனைத்துக் கட்சி கூட்டம், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக பல நாடுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் சந்திப்பு என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அந்த வரிசையில், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு குறித்து விளக்கி ஆதரவு திரட்ட  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு குழுவிலும் 5 அல்லது 6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றும் இந்த குழுவை மூத்த எம்.பி.க்கள் வழிநடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. வரும் 22-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Night
Day