உயர் ரக சொகுசு வாகனங்கள் இறக்குமதியில் ரூ.100 கோடி சுங்க வரி மோசடி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர் ரக சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, 100 கோடி ரூபாய் சுங்க வரி மோசடி செய்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 'கார் லவுஞ்ச்' ஷோரூமின் உரிமையாளரான பஷரத் கான், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களை போலி ஆவணங்கள் மூலம் குறைவான மதிப்பீடு காட்டி தொடர்ந்து சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தியதில் பஷரத் கான், வெளிநாடுகளில் வாகனங்களை வாங்கி துபாய் அல்லது இலங்கை வழியாக கொண்டு வந்து  இடது கை வாகனத்திலிருந்து வலது கை வாகனமாக மாற்றி இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Night
Day