பவன் கல்யாண் மீது கிரிமினல் வழக்‍குப் பதிவு செய்ய உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநில அரசை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மீது கிரிமினல் வழக்‍குப் பதிவு செய்ய குண்டூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்‍கூட்டம் ஒன்றில் பேசிய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், ஆந்திர அரசு சார்பில் செயல்படும் தன்னார்வலர்கள், பெண்களை கடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அம்மாநில அரசு குண்டூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், பவன் கல்யாண் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், வரும் 25ம் தேதி குண்டூர் நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்‍கு ஆஜராக வேண்டும் என்றும் பவன் கல்யாணுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Night
Day