எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை போலீசார் நிறுத்தியதால் மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுத முடியாமல் போனதாக எழுந்த புகாரில் முழு விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜே.இ.இ. தேர்வுகள் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பெண்டுர்த்தி வழியாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யான் சென்றதால், அப்பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் ஜே.இ.இ. தேர்வு எழுத சென்ற 30 மாணவர்கள் 2 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்திற்கு சென்றதால் தேர்வு எழுத முடியாமல் போனதாக அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்து தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் துணை முதலமைச்சர் வந்த வழியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தியது தொடர்பாக விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.