நில அபகரிப்பில் கோலோச்சிய திமுக.. சட்டத்தின் பேரில் அம்மா போட்ட கடிவாளம்..

எழுத்தின் அளவு: அ+ அ-

நில அபகரிப்பு என்னும் திமுகவின் கோர தாண்டவத்துக்கு பலியாகி தமிழக மக்கள் துயரக்கடலில் சிக்கி தவித்த நிலையில் 2011ம் ஆண்டு நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு அமைத்து, அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு தந்து துயரத்திலிருந்து மக்களை மீட்டது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு... திமுக ஆட்சிக்காலத்தில் தலைவிரித்தாடிய நிலஅபகரிப்பின் கோரம் குறித்தும், நிலத்தை இழந்து தவித்த மக்களின் கண்ணீர் துடைத்த மாண்புமிகு அம்மாவின் அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் பார்க்கலாம் விரிவாக.

2006-2011ம் காலக்கட்டத்தில் திமுக எனும் குடும்ப கட்சியின் அராஜக ஆட்சியில் நில அபகரிப்புகள் தழைத்தோங்கி இருந்தன... காலி மனையாக இருந்தாலும் சரி, கட்டிய வீடாக இருந்தாலும் சரி ஏன் விவசாய நிலங்களை கூட விட்டுவைக்காத அளவுக்கு, திமுக-வின் மேல் தட்டு முதல் அடித்தட்டு பிரமுகர் வரை நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து ஆக்கிரமிப்பு செய்து தமிழகத்தையே சூறையாடினர்... சாலையோரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, அதை விற்று பிள்ளைகளைக் கரையேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எத்தனையோ குடும்பங்கள், திமுகவினரின் அராஜகத்துக்கு ஆளாகி நிலத்தை இழந்து நடுதெருவில் நின்றனர்.. பலர் வலுக்கட்டாயமாக நிலங்களை சொற்ப விலைக்கு விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இது ஒருபக்கம் என்றால் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் அவர்களது நிலம் திமுகவினரால் சூறையாடப்பட்டது.. ஏதோ எதிரி நாட்டை போரில் வென்று, கொடியை நாட்டுவது போல, காலியாக இருந்த மனைகளில் கூடாரத்தை போட்டுக்கொண்டு திமுகவின் அராஜக கொடி நடப்பட்டது... 2 நாட்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு போனால், திரும்பும்போது வீடு மாற்றான் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும் என்ற உச்சக்கட்ட அவல நிலைதான் திமுக ஆட்சியில் நிலவிக்கொண்டிருந்தது.. ஏன் வீடு புகுந்து உரிமையாளர்களை வெளியே விரட்டிவிட்டு, அதில் திமுக கோஷ்டிகள் குடும்பம் நடத்திய அராஜகங்களெல்லாம் சர்வசாதாரணமாக அரங்கேறின... 

இப்படி வரம்பு மீறி, சட்டத்தை மீறி, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு இல்லாத ஆட்டம் போட்டனர் திமுகவினர்... இதனால் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் பூர்வீக சொத்துக்களையும், சிறுக சிறுக சேர்த்து வாங்கிய வீட்டையும் திமுகவின் அடாவடித்தனத்துக்கு பறிகொடுத்து, எதிர்காலத்தையும் தொலைத்து, தற்கொலை என்னும் முடிவுக்கு தள்ளப்பட்ட கதைகள் ஏராளம்... பாதிக்கப்பட்டவர்களில் பலர் திமுகவினர் கொலை மிரட்டலுக்கு அஞ்சி உள்ளுக்குள்ளேயே புழுங்கி, நொந்து போயினர்.. சிலர் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தபோது அவர்களின் புகார் காவல்துறையின் ஏட்டில் கூட ஏறவில்லை அப்படியொரு அராஜக தாண்டவம் தான் தமிழகத்தில் இருந்தது...

இந்த அராஜக ஆட்சி ஒழியாதா? தங்களை காப்பாற்ற யாரேனும் வர மாட்டார்களா? என தமிழக மக்கள் ஏங்கி தவித்துக்கொண்டிருந்த வேளையில்  தான், 'கருணாநிதியின் குடும்பத்தினராலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என 2011 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையாக அறிவித்தார் புரட்சித்தலைவி அம்மா.. மாண்புமிகு அம்மாவின் இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது... 

அதன்படியே 2011 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா-வை ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தனர் தமிழக மக்கள்... ஆட்சி பொறுப்பேற்றதும் தான் சொன்னபடியே, பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கையை முன்னெடுத்தார் புரட்சித்தலைவி அம்மா.. நில அபகரிப்பில் போலீசார் உள்பட யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாட்டையை சுழற்றினார் புரட்சித்தலைவி அம்மா... தமிழகம் முழுவதும், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் தனி போலீஸ் பிரிவு அமைத்து உத்தரவிட்டார்... அதுமட்டுமின்றி நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்கென்றே பிரத்தியேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார் புரட்சித்தலைவி அம்மா....

இதன் எதிரொலியாக திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூலிப்படைகள், பினாமிகள் மீது 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் கவால்நிலையங்களில் குவிந்தன. நில அபகரிப்பு காலக்கட்டத்தில் திமுக அமைச்சர்களாக இருந்த பொன்முடி, கே.என்.நேரு, என்.கே.கே.பி.ராஜா, சுரேஷ் ராஜன் சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெ.அன்பழகன், சவுந்திர பாண்டியன், திருச்சி துணை மேயர் அன்பழகன், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்  ஆகியோர் மீது நில அபகரிப்பு புகாரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், புரட்சித்தலைவி அம்மாவின் சாட்டைக்கு பயந்து, பின்னங்கால் பிடரியில் பட, நீதிமன்றங்களுக்கு ஓடிச்சென்று முன் ஜாமின் பெற்றனர். ஏன் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவருமான மு.க.அழகிரியும், புரட்சித்தலைவி அம்மாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து முன் ஜாமின் பெற்றார்.

இதில் மு.க.அழகிரி, மதுரையில் கட்டிய தயா பொறியியல் கல்லூரிக்காக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தொடர்பான வழக்கு தற்போதும் நடந்து வருகிறது... இதில் என்ன வேடிக்கை என்றால், தற்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை அலங்கரித்து வரும் தந்தை, மகன் மீதும், கூட நில அபகரிப்பு வழக்குகள் பாய்ந்தன... ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் ஸ்டாலின் பகுமானமாக வசித்து வரும் வீடு அமைந்திருக்கும் நிலமே ஆக்கிரமிப்பு தான் என கூறி அந்த நிலத்தின் உரிமையாளர் போலீசில் புகாரளித்த காட்சிகளெல்லாம் அரங்கேறின... புகாரளித்த நிலத்தின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமரசம் என்ற பேரில் நடந்தேறிய நாடகங்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சயம்... ஏன் திருச்சியில் திமுக அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடமே அபகரிப்பு நிலம் தான் என்ற அளவுக்கு நிலைமை தறிகெட்டுக்கிடந்தது...இப்படி திமுக ஆட்சியில் அரங்கேறிய நில அபகரிப்பு அராஜகங்களின் கொடுமைகள் செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் சாட்சிகளாக  கொட்டிக்கிடக்கின்றன... 

மதுரையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில் தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேர் கைது... நிலமோசடி வழக்கில் மதுரை தி.மு.க., மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் அவரது மருமகன் கைது... திருப்பூரில் மில் ஒன்றை அபகரித்தாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த ஜெ. அன்பழகன் கைது... ஈரோட்டுக்கு அருகிலுள்ள பெருந்துறையில் நிலத்தை அபகரித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா, ஈரோடு மேயராக இருந்த முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கைது... என நில அபகரிப்பு புகாருக்குள்ளாவர்கள் மீதான சட்டப்படி நடவடிக்கையின் லிஸ்ட் நீண்டுகொண்டே போனது...

இப்படியான கடும் நடவடிக்கைகளால் நிலத்தை இழந்தவர்களுக்கு அவர்களின் நிலங்களை மீட்டுக்கொடுத்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு. ஆனால் என்றைக்கு திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததோ, தமிழகத்தில் நில அபகரிப்புகள் மீண்டும் உச்சாணியில் ஆடத்தொடங்கிவிட்டது... 

வேலூரில் 10 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் அறுத்து வீசியது, நிலத்தை அபகரித்ததாக திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி மீது டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் என எங்கு திரும்பினாலும் திமுகவினரின் நில அபகரிப்பு அராஜகம்கொடிக்கட்டி பறக்கிறது....  

ஒரு பக்கம் மக்களில் நிலங்களை அபகரித்து வரும் திமுக, மறுபக்கம் சொத்து வரி உயர்வு என்ற பேரில் சாமானிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது... இதனால் 2011 வரலாறு மீண்டும் திரும்பப்போவது உறுதி என்பதே கள நிலவரமாக உள்ளது.


Night
Day