இந்திய பகுதிக்கு உரிமை கொண்டாடும் நேபாளம் - இந்தியா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா - சீனா மீண்டும் வர்த்தகம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேபாளத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

காலாபாணி பகுதி என்று அழைக்கப்படும் லிபுலேக் கணவாயின் தெற்கு பகுதி நேபாளத்திற்குச் சொந்தமானது என்றும், அந்தப் பகுதியில் வர்த்தகம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் இந்தியாவும், சீனாவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நேபாள அரசு எச்சரித்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், நேபாள அரசின் கூற்று தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது. மேலும், லிபுலேக் கணவாய் வழியாக இந்தியாவும் - சீனாவும் 1954 ஆண்டு முதல் வர்த்தகம் செய்து வருவதாகவும், கொரோனா காலத்தில் இந்த நடவடிக்கை தடைப்பட்டதாகவும் விளக்கி உள்ளது.

Night
Day