பல ஆண்டுகளுக்குப் பின் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்வு - இந்திய ரயில்வே

எழுத்தின் அளவு: அ+ அ-

பல ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக பயணிகள் ரயில் கட்டணங்களை இந்திய ரயில்வே உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. அதன்படி ஏசி அல்லாத விரைவு ரயில்களுக்கான பயணிகள் கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்படும் என்றும் ஏசி வகுப்புகளுக்கான கட்டண உயர்வு கிலோ மீட்டருக்கு 2 பைசாவாக இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் கட்டாயம் என ரயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day