தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லையா... - உயர்நீதிமன்ற கிளை கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லை  என்பதை உறுதியாக சொல்ல முடியுமா ? என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்‍கு கேள்வி எழுப்பி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி கேசவமணி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு தாக்‍கல் செய்திருந்தார். இந்த வழக்‍கில் கருத்து தெரிவித்த தமிழக அரசு தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லை என தெரிவித்தது. இதையடுத்து அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம் நீதிமன்றத்தில் இதுபோன்று சொல்ல முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது. கண்டதேவி கோவில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
 

varient
Night
Day