பயங்கரவாதத்தையும், நக்சலிசத்தையும் சகித்து கொள்ள முடியாது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயங்கரவாதத்தையும், நக்சலிசத்தையும் சகித்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற வடகிழக்கு முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பாஜக அரசு பின்பற்றுவதாக கூறியுள்ளார். கிழக்கு என்பது முந்தைய காலங்களில் எல்லை பகுதியாக இருந்ததாகவும், அது தற்போது இந்தியாவின் ஆற்றல் மையமாக திகழ்வதாகவும் கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பகுதி கனிம பொருட்களுக்கான புதிய உலகமாக திகழ்வதாகவும் கூறினார். 

Night
Day