பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.15,000ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீஹார் மாநில பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம்  ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் இறந்தால், அவர்களின் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகை சேவையை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு மரியாதைக்குரிய முறையில் வாழவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறி உள்ளார். வரும் நவம்பர் மாதம் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஆயத்தமாக இந்த ஓய்வூதிய தொகையை நிதிஷ்குமார் அரசு உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.
 

Night
Day