படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் தயார் - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். 

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவர், டெல்லியில் உள்ள ஷகூா்பஸ்தி பணிமனையில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட முதல் ரயில் தயாராக உள்ளதாக தெரிவித்தார். மற்றொரு ரயில் வரும் அக்டோபா் 12-ஆம் தேதிக்குள் தயாராகி விடும் என்றும், இரு ரயில்களும் ஒன்றுசேர தொடங்கி வைக்கப்படும் என்றும் கூறினார். தடையில்லா சேவைகளுக்கு இரண்டு ரயில்கள் மிக முக்கியமாகும் என்பதால், இரண்டாவது ரயில் தயாரான உடன் எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் இயக்கப்படலாம் என்றாா்.

Night
Day