நிதிஷ்குமார் வெளியேறியதால் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 


பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்ப்புகள் எதையும் குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றப்படவில்லை என்றும் இந்தியா கூட்டணி தொடக்கத்தில் இருந்தே எதையும் செய்யவில்லை எனக் கூறினார். இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கவனத்தை திசை திருப்பியதால் குறிப்பிட்ட இலக்குக்கு செல்ல இயலவில்லை என்றும் அந்த வகையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என்றார். அதனால்தான் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day