நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது மசோதா

எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பதவிநீக்க மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் முன்மொழிந்தார். இதற்கான குரல் வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் பதவிநீக்க மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். மக்களவையை சேர்ந்த 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் என 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழுவினர், வரும் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்கும் செயலி நிறுவனர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில், வெறும் பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்கும் வகையில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. 


Night
Day