தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை : உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை கூறியுள்ளது. பல்வேறு நிதியாண்டுகளில் முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சிக்கு வருமானத்துறை, ஆயிரத்து 700 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு விளக்கம் அளித்த வருமானவரித்துறை தரப்பு  வழக்கறிஞர் துஷார் மேத்தா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆயிரத்து 700 கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்தார். 

Night
Day