தேர்தல் பரப்புரைக்காக வரும் 9-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 9ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வரும் 9ம் தேதி சென்னை வருகை தர உள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Night
Day