தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தானதற்கு வருத்தப்படுவார்கள் - பிரதமர் மோடி பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததற்கு அனைவரும் ஒருநாள் வருத்தப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ளபேட்டியில், தேர்தலின்போது கருப்பு பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக இருந்ததாகவும் அதனை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தல் பத்திரம் திட்டம் உருவாக்கப்பட்டது என்றார். அதனைமுழுமையான முறை என்று கூறவில்லை என்றும் ஆனால் அது ஒரு தொடக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடை கணக்குகள் தெளிவாக இருந்ததாகவும் தற்போது அதனை ரத்து செய்து நாட்டை கருப்பு பணத்தை நோக்கி கொண்டு சென்று விட்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Night
Day