தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் அஜித் பவாருக்கு ஒதுக்கீடு : இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தர் ஆணையம் அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 29 எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அஜித் பவாரின் அணியே உண்மையான அணி என்றும்,  கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, தமது அணியின் பெயரை இன்று பிற்பகல் 3 மணிக்‍குள் தேர்ந்தெடுக்கும்படி சரத் பவாரை தேர்தல் ஆணையம் கேட்டுக்‍கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித் பவாரிடம் ஒப்படைத்துள்ளது சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Night
Day