எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்தை அஜித் பவாருக்கு வழங்கிய தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்படுத்தியதுபோன்று தங்களது தேசியவாத காங்கிரசையும் துண்டாடுவதாக குறிப்பிட்டார். சிவசேனாவுக்கு நடந்தது போன்று தங்களது கட்சிக்கும் நடைபெறுவதாக கூறிய அவர், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாக போராடப்போவதாக தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத்பவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.