தமிழக தலைமை செயலாளருக்கு கண்டனம் - நேரில் ஆஜராக உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2-வது தேசிய நீதித்துறை சம்பள ஆணையம் பரிந்துரைப்படி நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இந்த வழக்‍கில் காணொலியில் ஆஜராக அனுமதி கோரிய தமிழக அரசின் கோரிக்‍கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழக தலைமைச் செயலாளர் வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

varient
Night
Day