தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி காவிரி நீர் திறக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜுலை மாதம் வழங்க வேண்டிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் உரிய நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதன்படி தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

Night
Day