எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஒடிஷா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் அழகிய கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக தோரோட்டம் நடைபெறவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் புதியதாக உருவாக்கப்படும் தேரில் மூலவர்கள் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகியோர் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர்.
அந்த இந்தாண்டுக்கான தோரோட்ட விழாவின் தொடக்கமாக பஹந்தி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபபெற்றது. ரத யாத்திரைக்காக புதியதாக செய்யப்பட்ட தேர்களுக்கு ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகள் தனித்தனியே ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.
இதனை தொடர்ந்து 45 அடி உயர நந்திகோஷம் தேரில் ஜெகநாதரும், 44 அடி உயர தலத்வாஜா தேரில் பாலபத்திரரும், 43 அடி உயர தர்பதலனா தேரில் சுபத்ராவும் எழுந்தருள தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. 3 பிரம்மாண்டமான தேர்களும் வீதிகள் வழியாக ஆடி அசைந்து வருவதை லட்சக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்க கண்டு தரிசனம் செய்தனர்.
பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் முழுவதும் பக்தர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
யாத்திரைக்காக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் முதல் முறையாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஜெகநாத் ரத யாத்திரையில் ஈடுபடுத்தப்பட்ட 3 யானைகள் திடீரென மிரண்டு ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். ரதயாத்திரையின் போது வெடித்த பட்டாசு சத்தம் காரணமாக பீதியடைந்த யானைகள் ரத யாத்திரை வீதியில் ஆக்ரோஷமாக ஓடின. உடனடியாக பாகன்கள் ஓடிச்சென்று யானையை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.