எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆம்ஆத்மி கட்சி தொடங்கியது. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம்ஆத்மி போட்டியிடாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஏற்கனவே ஆத்ஆத்மி அமைச்சராக பதவி வகித்த கைலாஷ் கேலாட், தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நிலையில், நேற்று ஆம்ஆத்மி எல்எல்ஏவாக இருந்த அப்துல் ரஹ்மான், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். இவை அனைத்தும் ஆம்ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.