டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு - பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்‍கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு, இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

டெல்லியில் காற்று தரக்‍குறியீடு மிகவும் மோசமடைந்து 457 என்ற அளவில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்‍கப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து வகுப்புகளுக்‍கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்‍கு மட்டும் வழக்‍கம்போல நேரடி வகுப்புகள் நடக்கிறது.

varient
Night
Day