ஜம்மு - காஷ்மீரில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் : அக்.24-ம் தேதி என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீரில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 24 தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கடந்த 2021 பிப்ரவரி 10ம் தேதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்த முகமது பயாஸ் , ஷாம்ஸீர் சிங் மற்றும் 2021 பிப்ரவரி 15ம் தேதியுடன் பதவி காலம் நிறைவடைந்த குலாம் நபி ஆசாத் மற்றும் நசீர் அஹமத் லாவே உள்ளிட்டோருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், 13ம் தேதி  வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தினம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அக்டோபர் 24ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,

varient
Night
Day