எழுத்தின் அளவு: அ+ அ- அ
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வது தொடர்பான உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது. இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது. அதன்படி, மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய மகாராஷ்டிரா ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவு மீது எந்த வித நடவடிக்கையும் கூடாது என கூறி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.