எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் 12வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். ‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரதமர் வருகை தந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேட் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, முப்படை வீரர்கள் சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.