வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற  வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மேலும் , சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போயியுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வந்தது. அப்போது, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும் போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், அத்துமீறியுள்ளதாக தெரிவிக்கப்ட்டது. எனவே போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. 

இதனை கேட்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்,. அப்போது, அரசு பேருந்தை சேதப்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது,.கைது செய்யப்பட்ட பின்னர்தான் அரசு பேருந்து சேதமடைந்துள்ளது - அதற்கு முன்பாகவே கைது செய்தது ஏன் ? என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.  
 அரசு பேருந்தை சேதப்படுத்தியதற்காக கைது செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ,கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day